நம் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை மறக்க கூடாது – வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு துணை முதல்வர் அழைப்பு

0
22

நம்​முடைய மொழியை​யும், கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் மறந்​து​விடக் கூடாது என்று அயல​கத் தமிழர்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கேட்​டுக் கொண்​டார்.

அயல​கத் தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை சார்​பில் “தமிழால் இணைவோம் – தரணி​யில் உயர்​வோம்” என்ற தலைப்​பில் 2 நாள் நடை​பெறும் அயல​கத் தமிழர் தினம்​-2026 விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

இணை​ய​வழி​யில் நடத்​திய பேச்​சு, ஒப்​பு​வித்​தல், மாறு​வேடம், கதை சொல்​லுதல் போட்​டிகளில் வெற்​றி ​பெற்ற 15 பேருக்கு சான்​றிதழ், காசோலைகளை துணை முதல்வர்உதயநிதி வழங்​கி​னார்.

தொடர்ந்​து, விழா மலரை வெளி​யிட அமைச்​சர் துரை​முரு​கன் பெற்​றுக் கொண்​டார். தமிழக அரசின் சார்​பில், ரூ.10 லட்​சம் மதிப்​பிலான இசைக் கருவி​களை மொரீஷியஸ் நாட்​டுக்கு பிர​தி​நிதி மலை​யப்​பனிடம் உதயநிதி வழங்கினார்.

பின்​னர் உதயநிதி பேசி​ய​தாவது: தமிழ் நம் அனை​வரை​யும் இணைக்க கூடிய மொழி. தமிழ் என்​கிற அடை​யாளத்​துக்கு முன்​னால், வேறு எந்த அடை​யாள​மும் நிற்க முடி​யாது. எல்லா பேதங்​களை​யும் தாண்டி நம் அனை​வரை​யும் இணைத்​திருப்​பது நம்​முடைய தாய் மொழித்தமிழ்.

அப்​படி நாம் அனை​வரும் தமிழால் இணைந்​த​தால்​தான், இன்​றைக்கு தரணியை வென்று கொண்​டிருக்​கி​றோம். அயல​கத் தமிழர்​களுக்கு அரசு தந்த அடை​யாள அட்​டை​தான் உங்​களு​டைய தாய்​வீட்டு அடை​யாளம்.

நம்​முடைய மொழியையும், கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் மறந்​து​விடக் கூடாது. ஆண்​டு​தோறும் வெளி​நாட்​டில் வாழுகின்ற தமிழர்​களு​டைய அடுத்த தலை​முறை பிள்​ளை​களை தமிழகத்​துக்கு அழைத்து வந்​து, நம்​முடைய பண்​பாட்டு சின்​னங்​களை, அடை​யாளங்​களை அவர்​களுக்கு அறி​முகப்​படுத்த வேண்​டும்.

இந்த உலகத்​தில் நமக்​கென்று இருக்​கின்ற இடம் தமிழகம் என்ற நம்​பிக்கை அடுத்த தலை​முறைக்கு நிச்​ச​யம் ஏற்​படும். இவ்​வாறு பேசி​னார். இந்த விழா​வில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், சா.​மு.​நாசர், எம்​.பி.க்​கள் கலாநிதி வீரா​சாமி, கவிஞர் சல்​மா, அயல​கத் தமிழர் நலவாரி​யத் தலை​வர் கார்த்​தி​கேய சிவசே​னாப​தி, பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை செய​லா​ளர் ரீட்டா ஹரிஷ் தக்​கர், துறை ஆணை​யர் மா.வள்​ளலார், கனடா எம்​.பி. ஜூவனிதா நாதன், இலங்கை எம்​.பி. வி.எஸ்​.​ரா​தாகிருஷ்ணன், மலேசியா முன்​னாள் துணை அமைச்​சர் பி.கமல​நாதன்உட்பட பல்​வேறு நாடு​களைச் சேர்ந்​தவர்​கள் கலந்து கொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here