பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 2 நாளில் 2.50 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

0
24

பொங்கல் சிறப்பு பேருந்​துகளில் இரண்டு நாட்​களில் 2.47 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

2,092 பேருந்​துகள் இயக்​கம்: அந்த வகை​யில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கிறது. சென்​னை​யில் இருந்து தின​மும் 2,092 பேருந்​துகள் இயக்​கப்​படும் நிலை​யில், கடந்த 9-ம் தேதி கூடு​தலாக 614 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

712 சிறப்பு பேருந்துகள்: அதன்​படி அன்​றைய தினம் சென்​னை​யில் இருந்து இயக்​கப்​பட்ட 2,706 பேருந்​துகளில் மொத்​தம் 1 லட்​சத்து 21,770 பேர் பயணம் செய்​துள்​ளனர். இதே​போல நேற்று முன் தினம் வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன், கூடு​தலாக 712 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 2,804 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

இந்த பேருந்​துகளில் 1 லட்​சத்து 26,180 பயணி​கள் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர், கடந்த ஜன.9 மற்​றும் 10 ஆகிய 2 நாட்​களில் மொத்​தம் 5,510 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 2 லட்​சத்து 47,180 பயணி​கள் பயணம் மேற்​கொண்​ட​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

மேலும் இந்த சிறப்பு பேருந்​துகள் வரும் 14-ம் தேதி வரை இயக்​கப்​பட​வுள்​ளது. இன்று (ஜன.12) சென்​னை​யில் இருந்து வழக்​க​மாக இயக்​கப்​படும் 2,092 பேருந்​துகளு​டன் கூடு​தலாக 2200 பேருந்​துகள் என மொத்​தம் 4,292 பேருந்​துகளும், நாளை வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக 2,790 பேருந்​துகள் என மொத்​தம் 4,882 பேருந்​துகளும் இயக்​கப்​பட​வுள்​ளன.

இது​வரை சென்​னையி​லிருந்து 2 லட்​சத்து 18,900 பயணி​கள் முன்​ப​திவு செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here