தக்கலையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற மாவட்ட கலெக்டர் அழகுமீனா, காரில் சென்று கொண்டிருந்தபோது, வள்ளியாற்றில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டரின் இந்த செயலைப் பொதுமக்கள் பாராட்டினர்.














