நாகர்கோவில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், கே. பி. சாலை மற்றும் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு அனுமதியின்றி மதுபான பார் நடத்தி வந்த மாதவன் (49), ஜான் ராஜன் (55), மற்றும் விக்னேஷ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.














