காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த குடோன் உரிமையாளர் நாராயண மணி (42) நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், தனது குடோனால் அருகில் வசிக்கும் ஜோதிசுருபன் வீட்டில் பாறை பொடி படிந்ததாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, ஜோதிசுருபன், ஜான் பிரிட்டோ, பிளவர் ஆகியோரால் தாக்கப்பட்டார். மேலும், அவரது செல்போனும் பறிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நித்திரவிளை போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














