திருவட்டாறு தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கோரிக்கை குழுவினர், அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ், திருவட்டாறு தாலுகாவில் நீதிமன்றம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.














