கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் நேற்று இரவு ஒரு ஆக்கர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.














