குமரியில் ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு அரிசிமாவு, பூக்கள், கரும்பு, வாழை, மாம்பழம், ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்களால் பிரமாண்ட படையலிட்டு நந்தி ஊட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மஹா தேவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இந்த பூஜைகளில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.














