2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகு குமரி கடலோர மீனவ கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு முகாம் குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் குளச்சல் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மோகனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாம், விடுபட்ட மீனவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டது.














