திருவட்டாறு தளியல் ஜடாதீஷ்வரர் கோவிலில் நேற்று இரவு (ஜனவரி 1) பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தீஷ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமானை துதித்து பாடல்கள் பாடினர். சிவபெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலையில் மிருத்துஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது.














