
குமரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.













