
ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த வில்லியம் போஸ் என்பவரது கரும்புச்சாறு கடையில், நேற்று மாலை அவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது வலது கை விரல்கள் சிக்கின. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் முயன்றும் சிறுவனை மீட்க முடியவில்லை. மயக்கமடைந்த சிறுவனை, மெக்கானிக்கை வரவழைத்து 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவன் குறித்து குளச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.







