
நித்திரவிளை, ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி (57) நேற்று முன்தினம் தனது ஆட்டோவை பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் அருள் சஜு (40) வீட்டின் முன்பக்கம் வழியாக ஓட்டிச் சென்றபோது, அருள் சஜு தகராறு செய்து ஆட்டோவை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும், சசிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து சசி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் அருள் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.







