
மாங்கரை பகுதியில் நேற்று, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், எதிரே பைக்கில் வந்த சிவகுமார் (39), ரேஸ்மா (29), சஜினி (25) ஆகியோர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் படுகாயமடைந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது, அதன் முன் பக்க டயர் கழன்று ஓடியது. கருங்கல் போலீசார் விசாரித்ததில், காரை ஓட்டிச் சென்றது வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகன் என்பது தெரியவந்துள்ளது.









