
ராமன்துறை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குழித்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முள்ளுர்துறையைச் சேர்ந்த 28 வயது பெண் தனக்கு கடந்த 28-12-2023 அன்று கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மற்றும் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவின் பேரில், கோர்ட் உத்தரவின்படி புதுக்கடை போலீசார் அந்த பெண் மீது மோசடி, நம்ப வைத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









