
திருவட்டார், ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தை சிலர் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வழக்கு நடந்து வருகிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













