கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலீஸ் எச்சரிக்கையை மீறி குளச்சல் காந்தி சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாகவும், சைலன்சர் குழாய்களை மாற்றி அதிக ஒலி எழுப்பியும் பைக் ஓட்டியுள்ளனர். இதனால், போலீசார் 42 பைக்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விதிமுறைகளை மீறி சைலன்சர் குழாய்களை மாற்றிய மூன்று ஒர்க்ஷாப் கடைக்காரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.














