படந்தாலூமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த அனுப் (36) என்பவர், நேற்று குளியலறை கதவு பூட்டிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














