குமரி: கடலில் கிறிஸ்மஸ் கொண்டாடிய வாலிபர் பலி

0
30

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து 9 பேருடன் படகில் கடலுக்குச் சென்றபோது, கரை திரும்பும் போது படகிலிருந்து கீழே இறங்கும் போது நிலை தடுமாறி ரெஜின் ஜாஸ்பின் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக குளச்சல் கடலோர காவல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here