உண்ணாமலைகடை பேரூராட்சியின் துணைத் தலைவர் செல்வின் (34) குழிச்சவிளை பகுதியில் சாலை பக்க சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் தகராறு செய்து, கம்பாலும் கல்லாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








