குழித்துறை, கழுவன்திட்டையைச் சேர்ந்த விமலா (38) என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஹரிஷ் (35) என்பவருக்கும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று விமலாவின் மகள் வீட்டு முன் நின்றபோது, ஹரிஷ், சாம்ராஜ் (52) மற்றும் சாம்ராஜின் மனைவி விமலா (35) ஆகியோர் தாய்-மகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








