குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் கஞ்சா புகைப்பதற்காக வைத்திருந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.














