கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பைங்குளம் ஊராட்சியில் அம்சி தெரு – அரசகுளம் – விழுந்தயம்பலம் சாலை, நபார்டு வங்கி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நேற்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.














