நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தற்போதைய புயல் காரணமாக இலங்கை கடல் பகுதியிலிருந்து இறந்த நிலையில் திமிங்கலம் ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. வனத்துறையினர் திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.














