பொருளாதாரத்தில் முன்னேற்றம்: பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்

0
15

பாகிஸ்​தான் பொருளா​தார நெருக்​கடியி​லிருந்து மீண்டு வரு​வதை கருத்​தில் கொண்டு கூடு​தலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) ஒப்​புதல் அளித்​துள்​ளது.

பாகிஸ்​தான் இது​வரை காணாத பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கித் தவித்து வந்​ததை அடுத்து தற்​போது அதில் இருந்து படிப்​படி​யாக மீண்டு வரு​கிறது.

இதுகுறித்து ஐஎம்​எப் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாகிஸ்​தானின் பொருளா​தார திட்​டங்​கள் குறித்த இரண்டு மதிப்​பாய்​வு​களை ஐஎம்​எப் நிர்​வாக குழு நிறைவு செய்​துள்​ளது.

பாகிஸ்​தானின் பிர​தான கடன் வசதி​யின் கீழ் ரூ.9 ஆயிரம் கோடி​யும், தனி​யாக காலநிலை சார்ந்த திட்​டத்​திலிருந்து மேலும் ரூ.1,780 கோடி​யும் நிதி​யுதவி வழங்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்று தெரி​வித்​து உள்​ளது.

தற்​போது வழங்​கப்​பட்ட கடனுத​வி​யுடன் சேர்த்து பாகிஸ்​தான் கடந்த ஆண்​டில் இருந்து மொத்​தம் ரூ.29,653 கோடியை ஐஎம்​எப் இடம் இருந்து பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. புதிய கடனுதவி திட்​டத்​தின் கீழ் ஒப்​புக் கொள்​ளப்​பட்ட நிபந்​தனை​களை பூர்த்தி செய்​தால், பாகிஸ்​தான் 37 மாதங்​களுக்​குள் இந்த கடன் தவணை​களைப் பெறும். பாகிஸ்​தான், பல தசாப்​தங்​களாக, அதன் நிதித் தேவை​களைப் பூர்த்தி செய்ய ஐஎம்​எப் மற்​றும் அதன் நட்பு நாடு​களின் கடன்​களை மட்​டுமே நம்​பி​யுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here