இரணியல், நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற உள்ளதால், நாளை (10 ஆம் தேதி) முதல் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாகனங்கள் இரணியல் சந்திப்பில் இருந்து கல்குறிச்சி, தக்கலை வழியாகச் செல்ல வேண்டும். நாகர்கோவிலில் இருந்து வரும் கனரக வாகனங்கள் தக்கலை, இரணியல் வழியாக திங்கள்நகருக்குச் செல்லலாம். கார், ஆட்டோ, பைக்கில் செல்பவர்கள் கண்டன்விளை, நான்கு வழிச்சாலை வழியாகச் செல்லலாம் என குளச்சல் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.














