ததேயுபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆன்டனி (44), தனது மனைவி செலின் மேரியை கூட்டுறவு வங்கியில் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. மாலையில் வீட்டிற்குச் சென்ற மனைவி, ஆன்டனி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.














