குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், கேரளப் பகுதியிலிருந்து யானைகள் குமரி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள பயிர்கள் அதிக அளவில் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பேச்சிப்பாறை பகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ஒரு குட்டியானை உட்பட இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை கூட்டமாக வலம் வந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.














