இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2027ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சந்திராயன் 4 மற்றும் 5 திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சந்திராயன் 5 திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டுடன் இணைந்து 6,800 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.














