குமரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கனகர லாரி வெள்ளிகோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக ஓடியது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.














