அருமனை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்றதாக புண்ணியம் பகுதியை சேர்ந்த சுந்தரபாய் (56) என்பவர் 26 மது பாட்டில்களுடன் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பலமுறை மது விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜாமினில் வெளியே வந்த சுந்தரபாய் நேற்று மீண்டும் அவரது வீட்டருகே மது விற்றபோது, அருமனை போலீசார் அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.














