கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இனயம் புத்தன்துறை, கொல்லங்கோடு, கருங்கல், முள்ளங்கினா விளை, திப்பிரமலை ஊராட்சி, பேருராட்சி பகுதிகளை உள்ளடக்கிய பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கான கூட்டம் நேற்று இனயயம் புத்தன்துறையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை கலந்து கொண்டு பூத் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.














