குளச்சல், மேலமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய அருள் (32) மற்றும் சேவியர் ஆண்டனி சுபன் (31) ஆகியோர் கடந்த 17ஆம் தேதி பைபர் படகில் நீரோடி கடல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் அலை காரணமாக படகு அலை தடுப்பு சுவரில் மோதி சேவியர் ஆண்டனி சுபன் கடலில் மாயமானார். குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று மாலையில் கேரளா, விழிஞ்சம் கடற்கரை பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்தனர்.














