களியக்காவிளை அருகே உள்ள சிவ பார்வதி கோயிலில், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதியாக முகாம் அமைக்கப்படுகிறது. இந்த வருட முகாம் துவக்க விழா இன்று 18-ம் தேதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














