கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு குவிந்து, வீட்டின் கேட்டை சங்கிலியால் பூட்டி, யாரும் வாங்கக்கூடாது என நோட்டீஸ் ஒட்டினர். குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.














