தும்பாலி பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்படுவதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பாறை உடைக்கும் இயந்திரத்தை விட்டுவிட்டு பணியாளர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், நில உரிமையாளர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர்.














