மணியாரம்குன்று பகுதியைச் சேர்ந்த சூசைமுத்து (72) என்பவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாட்டை, நம்பர் தெரியாத மினி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் அவிழ்த்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














