தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

0
12

தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார்.

ஆடு – மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் தண்ணீர் மாநாட்டை திருவையாறு தொகுதியில் நவம்பர் 15-ல் நடத்துகிறார். இதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறார் சீமான்.

தனித்துப் போட்டி என முன்னமே அறிவித்துவிட்ட சீமான், 234 தொகுதி களுக்குமான நாதக வேட்பாளர்களை தேர்வு செய்து தொகுதிவாரியான தனது சுற்றுப்பயணத்தின் போது அவர்களை அறிமுகப்படுத்தியும் வருகிறார். அந்த வகையில், இந்த 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், தண்ணீர் மாநாட்டில் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here