நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மடிக்கணினி, செல்போன், கணினி மற்றும் ரூ. 4,560 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த லாட்டரி விற்பனையில் பகவதி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














