மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முதலில் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தின் முன் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 46 பெண்கள் உள்ளிட்ட 110 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.














