தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை கோபாலன் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














