குளச்சல் கடற்கரை கிராமத்தில், மீனவரின் மனைவி வேறொரு வாலிபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்தபோது, மீனவர் அவர்களைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர், இருவரையும் தாக்கி, பிளேடால் மனைவியின் கள்ளக்காதலனின் கழுத்தை அறுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














