நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே பல பெண்களை இதேபோல் துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் பேரில் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.














