
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி, மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













