நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஜெர்சிலின் நிஜி (31) என்பவரை காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த ஷெரின் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 3 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவதாக ஷெரின் மிரட்டியுள்ளார். பணம் தராததால், புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, நிஜியின் கணவருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து கேட்டபோது, நிஜியை ஷெரின் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நித்திரவிளை போலீசார் ஷெரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.














