மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கிளார்க்காகப் பணிபுரிகிறார். மது அருந்திவிட்டு வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிபா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரைமண்ட், ஜெனிபா வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் ரைமண்ட் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.














