ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

0
16

நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது.

2025 ஜனவரி முதல் ஜூன் வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சிஐஎஸ் நாடு​களுக்கு வெளி​யில் இருந்து 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான சுற்​றுலாப் பயணி​கள் மாஸ்​கோவுக்கு வருகை தந்​துள்​ளனர். இது, கடந்த 2024-ம் ஆண்​டை காட்​டிலும் 10% அதி​கம்.

ஆசிய நாடுகளில் இருந்து மாஸ்​கோவுக்கு செல்​லும் ஆர்​வம் பலரிடம் அதி​கரித்​துள்​ளது. அதன் விளை​வாக, சுற்​றுலாப் பயணி​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

மாஸ்​கோ உலகள​வில் அனை​வரை​யும் ஈர்க்​கும் சுற்​றுலாத்​தல​மாக விரிவடைந்து வரு​கிறது என்று மாஸ்​கோ நகர சுற்​றுலா குழு தெரி​வித்​துள்​ளது. இ-விசா வசதி மற்​றும் அங்கு நடை​பெறும் கலாச்​சார கொண்​டாட்​டங்​கள் ஆகியவை உலகெங்​கிலும் இருந்து சுற்​றுலாப் பயணி​களை அதிக அளவில் ஈர்த்து வரு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here