தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் தொழில் செய்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மனு (38) என்பவர், கடந்த 7ம் தேதி மீன்பிடித்து விட்டு படகை பரக்காணி ஆற்றில் நிறுத்தினார். நேற்று முன்தினம் மதியம் படகில் காணாமல் போன மனு, நேற்று தண்ணீரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, மனுவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














