பிஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். ஆனால், பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளில், 49 வேட்பாளர்கள் முற்பட்ட வகுப்பினர்.
இதை ஈடுசெய்ய தே.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது. இக்கட்சியில் 22 வேட்பாளர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சியில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.














