ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதாக கேட்டதால், ராபின்சன் மற்றும் மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி, கையில் இருந்த சாவியால் தலையில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














